மத்திய உள்துறை அமைச்சர் தேசிய அளவில் ‘மாணவர் காவல்துறை படைப்பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இத்திட்டம் எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குற்றத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (Crime Prevention and Control), விழுமியங்கள் மற்றும் அறநெறிகள் (Ethics and Values) ஆகிய இரு தலைப்புகளைக் கொண்டுள்ளது.
இத்திட்டம் மாநில அளவில் உள்துறைக்கான முதன்மைச் செயலாளர் தலைமையிலான குழுவின் கீழ் செயல்படும். இக்குழுவில் கல்வித் துறைக்கான முதன்மைச் செயலாளர் மற்றும் காவல்துறையின் பொது இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
இதே போன்ற குழு மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்படும். அக்குழுவில் மாவட்டப் பள்ளிகளின் ஆய்வாளர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.