TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 26 , 2023 298 days 251 0
  • மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்புகளைத் தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்.
  • மாற்றுப் போக்குவரத்தினை மேம்படுத்துவதற்காகவும், மகிழுந்துகளின் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதியன்று உலக மகிழுந்து பயன்பாடு இல்லா தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக நதிகள் தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் ஒவ்வொர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமையன்று (செப்டம்பர் 24) தேசிய மகள்கள் தினமானது பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கென கூடுதல் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்க கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்