பிரபல வரலாற்று ஆசிரியரான இராமச்சந்திர குஹா எழுதிய “காந்தி: உலகத்தை மாற்றிய ஆண்டுகள்” (1914 – 1948) என்ற புத்தகம் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா என்ற பதிப்பகத்தாரால் வெளியிடப்படவிருக்கிறது.
உகாண்டாவில் தற்போது காந்தியின் சிலை இருக்கும் பகுதியான ஜின்ஜாவில், காந்தி பாரம்பரிய மையம் அமைக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார்.
நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்கப் பணி மற்றும் Mygov தளம் ஆகியவை இணைந்து ‘#InnovateIndiaPlatform’ – ஐத் தொடங்கியுள்ளது. ‘#InnovateIndiaPlatform’-ஆனது இந்த இரு தளங்களுக்கிடையேயான கூட்டுச் செயல்பாடாகும். “#InnovateIndiaPlatform” ஆனது நாட்டில் நிகழும் அனைத்து கண்டுபிடிப்புகளின் பொது இணைய வாயிலாக செயல்படும்.
18-வது சர்வதேச குழந்தைகளுக்கான திரைப்படத் திருவிழாவினை மேற்கு வங்காள ஆளுநர் கே என் திரிபாதி தொடங்கி வைத்தார். இத்திரைப்படத் திருவிழாவில் 17 நாடுகளைச் சேர்ந்த 36 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இத்திரைப்படத் திருவிழாவினை நாட்டின் பழமையான சினிமா சங்கமான சினி சென்ட்ரல் சங்கம் மற்றும் யுனிசெப் ஆகியவை இணைந்து நடத்துகிறது.
பாட்னா உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியான ராஜேந்திர மேனனை டெல்லி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தலைமை நீதிபதியான கீதா மிட்டலை ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
2018 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தைக் குறிக்கும் விதமாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமானது ‘#Childline1098’ என்ற போட்டியைத் தொடங்கியுள்ளது. CHILDLINE என்பது குழந்தைகளுக்குத் தேவையான உதவி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட 24 மணி நேரமும் இயங்கும் இலவச அவசர தொலைபேசிச் சேவையாகும்.