TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 29 , 2018 2182 days 662 0
  • GST தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கும் வரிகளின் வட்டி விகிதங்களை கணக்கிடுவதற்கும் தமிழ்நாட்டின் வணிக வரித்துறை புதிய கைபேசிச் செயலியான TNCTD - GSTயினை தொடங்கியுள்ளது.
  • மாநில சட்டசபையான விதான சௌதாவினுள் ஊடக ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது எனும் உத்தரவினை கர்நாடக அரசு அளித்துள்ளது. கர்நாடக மாநில சட்டசபையில் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
  • சுந்தர்கர் மாவட்டத்தில் 5,800 ஹெக்டேர்கள் வேளாண் நிலப்பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதியை வழங்கும் 300 கோடி ரூபாய் திட்டமான ருக்குரா நடுத்தர நீர்ப்பாசன அணைத் திட்டத்தினை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்