TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 2 , 2023 292 days 250 0
  • மதராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (IIT-M) முன்னெடுப்புகளுக்காக வேண்டி இந்தியப் பசுமைக் கட்டிடச் சபையின் (IGBC) பிளாட்டினத் தரச் சான்றிதழ் வழங்கி அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • கூகுள் இன்க் நிறுவனமானது செப்டம்பர் 27 ஆம் தேதியன்று தனது 25வது (1998 ஆம் ஆண்டு நிறுவப் பட்டது) தொடக்க நாளினைக் கொண்டாடியது.
  • சுற்றுலாத் துறை அமைச்சகமானது, கேரளாவின் காந்தளூர் கிராமத்தினை 2023 ஆம் ஆண்டின் சிறந்தச் சுற்றுலா கிராமமாக தேர்வு செய்து உலகச் சுற்றுலா தின விழாவில் (செப்டம்பர் 27) தங்கப் பதக்கத்தினை வழங்கியுள்ளது.
  • உத்தரப் பிரதேச மாநிலமானது அதன் 95,767 கிராமங்கள் அனைத்திலும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) மாநிலம் பிளஸ் என்ற அந்தஸ்தைப் பெற்றதன் மூலம் குறிப்பிடத்தக்கச் சாதனையை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்