அமெரிக்காவின் ஸ்போகேன் நகரில் நடைபெற்ற உலக இளையோர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியப் பேட்மிண்டன் அணி பிரேசில் அணியினை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மேகாலயாவின் கிழக்கு காசி மலைப்பகுதியில் உள்ள கோங்தாங் கிராமம், 2023 ஆம் ஆண்டு தேசியச் சுற்றுலா விருதுகள் விழாவில் மதிப்புமிக்க 'சிறந்த சுற்றுலா கிராமம் (வெண்கலம்)' என்ற விருதைப் பெற்றுள்ளது.
சர் ஜார்ஜ் எவரெஸ்ட் அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் முதல் நில வரைபடவியல் அருங்காட்சியகம் ஆனது முசோரியில் அதிகாரப் பூர்வமாக திறக்கப் பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஜீவாரில் அமைக்கப்பட உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகமானது ‘DXN’ எனப்படும் அதன் தனித்துவமான சர்வதேச மூன்றெழுத்து குறியீட்டினை வழங்கியுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியக் குழுவின் நீட்டிக்கப்பட்ட 45வது அமர்வு மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற முதல் நேரடி குழுக் கூட்டம் ஆனது சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.