TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 13 , 2023 281 days 212 0
  • உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
  • அரசானது, இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் (IDMA) இணைந்து அக்டோபர் 10 ஆம் தேதியன்று முதலாவது தேசிய நடப்பு மருந்து உற்பத்தி நடைமுறை தினத்தினை (cGMP தினம்) கொண்டாடியது.
  • இந்திய நாட்டிற்கு வெளியே வேறொரு நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய இந்து கோவிலான BAPS சுவாமிநாராயண் அக்சார்தம் எனும் கோவில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் திறக்கப்பட்டுள்ளது.
  • பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற லியாண்டர் பயஸ் சர்வதேச டென்னிஸ் புகழ் மன்றத்திற்கு விளையாட்டு வீரர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசிய வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்