TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 15 , 2023 407 days 247 0
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்கோட்டையில் அமைந்துள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சமீபத்தில் காலமான புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி M.S. சுவாமிநாதன் அவர்கள் பெயர் சூட்டப் படவுள்ளது .
  • எந்தவொரு வேளாண் விளைபொருட்களையும் இயங்கலையில் வர்த்தகத்தை மேற் கொள்வதற்கான ஒரு வர்த்தக தளத்தினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (ஒழுங்குமுறை) சட்ட திருத்த மசோதாவானது சமீபத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது.
  • 49வது அகில இந்திய காவல்துறை அறிவியல் மாநாடானது (AIPSC) உத்தரகாண்ட் மாநிலக் காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த நிகழ்வின் கருத்துரு, "அமிர்த காலத்தில் காவல்துறை" என்பதாகும்.
  • இந்திய விமானப் படையானது (IAF) அதன் 91வது ஆண்டு விழாவில் அப்படைப் பிரிவிற்கான புதிய கொடியை வெளியிட்டது.
  • சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி ஆகியவை இணைந்து மொராக்கோவின் மரக்கேஷ் நகரில் அதன் வருடாந்திரக் கூட்டங்களை கூட்டியுள்ளன.
    • அவற்றின் 50 ஆண்டுகால வரலாற்றில் ஆப்பிரிக்க மண்ணில் இந்த அமைப்புகள் தனது முதல் வருடாந்திரக் கூட்டங்களை நடத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்