தேசிய வேளாண் அறிவியல் கழகத்தினால் (NAAS) ஏற்பாடு செய்யப்பட்ட 16வது வேளாண் அறிவியல் மாநாடானது (ASC) கொச்சியில் நடைபெற்றது.
பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனமானது, பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தெற்காசியாவின் முதல் விமான மீட்பு பயிற்சிப் பள்ளியை நிறுவியுள்ளது.
கேரளாவின் வயநாடு பகுதியில், எபிதெமிஸ் வயனாடென்சிஸ் எனப்படும் ஒரு புதிய வகை தட்டான் பூச்சி தென்பட்டதாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பு மருந்து வழங்கீட்டின் பரவலை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்துவதற்கான தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் 5.0 பிரச்சாரத்தின் 3வது சுற்று சமீபத்தில் நிறைவடைந்தது.
9வது G20 நாடாளுமன்றச் சபாநாயகர்கள் உச்சி மாநாடு ஆனது (P20) புது டெல்லியில் நடைபெற்றது.
சர்வதேசப் பகுதியளவு வறண்ட வெப்பமண்டலப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) ஆனது ஒரு CGIAR (சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு) ஒருங்கிணைந்த கூட்டுறவு அமைப்பில் இணைந்துள்ளது.
ICICI வங்கியானது, வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள் குறித்தத் தகவல்களை ஒரே தளத்தின் மூலம் பார்க்க வழி வகுக்கும் வகையிலான ‘iFinance’ என்ற செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.
உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த போர்க்களமான சியாச்சின் பனிப் பிரதேசத்தில் முதன்முறையாக BSNL நிறுவனத்தின் கைபேசி அலைவரிசை கோபுரம் என்பது நிறுவப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அவர்கள், விரைவில் நடைபெற உள்ள 2023 ஆம் ஆண்டு மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான ‘ஜூஹி’ எனப்படும் உருவச் சின்னத்தினை வெளியிட்டார்.
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2023 ஆம் ஆண்டிற்கான ஆடவர் உலக தடகள வீரர் விருதிற்கு பரிந்துரைக்கப் பட்ட 11 பேரில் ஒருவராக இடம் பெற்றுள்ளார்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரின் அரசு முறைப் பயணத்தின் போது 2023 ஆம் ஆண்டு இந்திய-சவுதி அரேபியா முதலீட்டு மன்றம் ஆனது புது டெல்லியில் ஏற்பாடு செய்யப் பட்டது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது அதிகாரப் பூர்வ முதலீட்டுக் கருத்தரங்கம் என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாகும்.