கடந்த ஆண்டின் முதல் பாதியில் 17,306 மெகாவாட்டாக இருந்த தமிழகத்தின் உச்ச கட்ட மின் தேவையானது, 2023-24 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 10.04% அதிகரித்து 19,045 மெகாவாட்டாக பதிவாகியுள்ளது.
இந்தியப் போட்டி ஆணையமானது, 8வது பிரிக்ஸ் சர்வதேசப் போட்டி மாநாட்டினை (2023) (பிரிக்ஸ் ICC 2023) புது டெல்லியில் நடத்தியது.
இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் (IRCON) மற்றும் RITES Ltd (RITES) ஆகியவை முறையே 15வது மற்றும் 16வது நவரத்தின நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.