TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 30 , 2018 2181 days 652 0
  • இந்திய - வியட்நாம் பொருளாதார தொடர்புகளுக்கான சர்வதேச மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது. வியட்நாமுடனான பொருளாதார உறவுகளை அதிகரிக்கச் செய்வது மற்றும் அரசின் கிழக்கு நோக்கிய கொள்கைகளை செயல்படுத்துவது ஆகியன இதன் முக்கிய நோக்கங்களாகும்.
  • துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.பல்கலைக்கழகத்தின் பார்வையாளர் பதவியில் உள்ள குடியரசுத் தலைவரால் இந்நியமனத்திற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டது.  வேந்தரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.
  • இந்திய – UK (ஐக்கியப் பேரரசு) அறிவியல் மற்றும் புத்தாக்க கழகத்தின் 6வது சந்திப்பு புது தில்லியில் நடைபெற்றது. இதில் இரண்டு நாடுகளுக்கிடையேயான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஒத்துழைப்புகளுக்கான வெவ்வேறு வித பிரச்சினைகள் விவாதிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்