சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT-M) சிலிக்கான் ஊடகம் கொண்ட ஒளியணுவியல் சிறப்பு மையம் (SPRCE) தொடங்கப் பட்டுள்ளது.
இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளி, கத்தார் மாஸ்டர்ஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர் மேக்னஸ் கார்ல்சனை (நார்வே) தோற்கடித்தார்.
மத்தியப் புலனாய்வுப் பிரிவானது, இணைய வெளி வழியான நிதி மோசடியைத் தடுப்பதற்காக ‘சக்ரா-II’ என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.
லடாக்கில் உள்ள 13-ஜிகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத் தக்க எரிசக்தி நிலையத்திற்கான பசுமை ஆற்றல் வழித்தடத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் - மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது, ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்களில் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு 100க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துப் பெட்டகங்களை வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளது.
இலகுரக மின்சார வாகனங்களுக்கான (LEV) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உலகின் முதல் ஒருங்கிணைந்த AC மற்றும் DC மின்னேற்ற இணைப்பான்களின் தர நிலைக்கு இந்தியத் தரநிலை வாரியம் (BIS) ஒப்புதல் அளித்துள்ளது.
1973 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மைசூர் மாநிலத்தினை கர்நாடகா என்று மறு பெயரிடப்பட்டதன் பொன்விழாவைக் குறிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் அவர்கள் கர்நாடக சம்ப்ரமா-50 விழாவின் சின்னத்தினை வெளியிட்டார்.
இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை இடையேயான முதல் 2+2 வெளியுறவு மற்றும் பாதுகாப்பு பேச்சுவார்த்தையானது புது டெல்லியில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியம் ஆனது, கடந்த ஆண்டு ஈரானிய அதிகாரிகளால் கைது செய்யப் பட்டு பின்னர் மரணமடைந்த மஹ்சா அமினிக்கு சிந்தனைச் சுதந்திரத்திற்கான சகாரோவ் பரிசை வழங்கியுள்ளது.
இந்தியப் பட்டயக் கணக்காளார் நிறுவனமானது (ICAI), நிலைத்தன்மை மிக்க அறிக்கையிடலில் அதன் பங்களிப்பிற்காக வேண்டி மிகவும் மதிப்புமிக்க சர்வதேச கணக்கியல் மற்றும் அறிக்கையிடல் (ISAR) விருதைப் பெற்றுள்ளது.
அரசாங்கத்தின் சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தியா 2040 ஆம் ஆண்டிற்குள் நிலவிற்கு ஒரு விண்வெளி வீரரை அனுப்புவதையும் 2035 ஆம் ஆண்டிற்குள் ஒரு விண்வெளி நிலையத்தைக் கட்டமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூகுள் இந்தியா நிறுவனமானது, அதிகரித்து வரும் நிதி மோசடி முறைகளைக் கண்டு அறிந்து அது குறித்து ஆய்வு செய்வதற்காக என்று வடிவமைக்கப்பட்டுள்ள டிஜிகவாச் எனப்படும் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே நன்கு கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அமைப்பினை அறிமுகம் செய்துள்ளது.