TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 29 , 2023 265 days 210 0
  • இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தினால் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட உள்ள ஆறு புதிய டார்னியர் டோ-228 ரக விமானங்களில் முதல் விமானத்தினை இந்திய விமானப்படை (IAF) பெற்றுள்ளது.
  • இந்திய விமானப் படையானது (IAF) சுகாய்-30 MKI ரக போர் விமானங்களை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுத அமைப்புகள் மற்றும் விருபாக்ஷா AESA எனப்படும் ரேடார் ஆகியவற்றினைப் பொருத்தி மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
  • அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையானது, குடியரசுக் கட்சியின் மைக் ஜான்சனை அவையின் புதிய சபாநாயகராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டுக்குச் சொந்தமான துணை நிறுவனங்கள் தங்கள் வாரியங்களில் குறைந்தபட்சம் இரண்டு முழு நேர இயக்குநர்களை (WTDs) நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
  • இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் ரஷ்ய நகரமான கசானில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் குறித்த மாஸ்கோ வடிவ ஆலோசனையின் ஐந்தாவது கூட்டத்தில் பங்கேற்றனர்.
  • வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது (நேட்டோ), 2024 ஆம் ஆண்டில் "ஸ்டெட்ஃ பாஸ்ட் டிஃபென்டர்" என்ற கூட்டு படைப்பிரிவு மற்றும் துருப்புகள் பயிற்சிக்குத் தயாராகி வருகிறது.
    • பனிப்போரின் முடிவிற்குப் பிறகு 40,000 படைப்பிரிவினரைக் கொண்டு நடத்தப் படும் மிகப்பெரியப் பயிற்சியாக இது இருக்கும்.
  • குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ கிராமத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பின் (UNWTO) மிக மதிப்பு மிக்க "சிறந்தச் சுற்றுலா கிராமம்" என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  • சூரிய சக்தித் தகடுகளின் செயல்திறனைக் கண்டறிவதில் மக்களுக்கு உதவுவதற்காக அரசானது சூரிய ஒளி மின்னழுத்தத் தொகுதிகளுக்கு தரநிலைகள் மற்றும் அதற்கு முத்திரையிடும் திட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இராணுவத் தளபதிகளின் மாநாட்டின் போது, ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர் இராணுவ நிலையத்திற்கு 'சிறந்தப் பசுமைமிகு இராணுவ நிலையம்' என்று பாராட்டப் பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய அரசாங்கத்தின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை வெளியீடுகள் பிரிவானது மதிப்புமிக்க 75வது பிராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றது.
  • இந்தியாவின் ஜவுளித் தொழில்துறையானது, உலகின் மிகப்பெரிய ஜவுளி நிகழ்வாகக் கூறப்படும் "பாரத் டெக்ஸ் 2024" என்ற ஜவுளிப்பொருட்களின் கண்காட்சியை நடத்த முடிவு செய்துள்ளது.
  • ஹார்வர்டு சட்டக் கல்லூரியின் மிக உயரிய தொழில்முறை விருதான 'உலகளாவிய தலைமைத்துவத்திற்கான விருதானது' இந்தியத் தலைமை நீதிபதியான (CJI) DY சந்திரசூட் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய அரசானது, பண்டைய உத்திசார் நுட்பத்தினைச் சமகால இராணுவ நடைமுறைகளுடன் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட ‘உத்பவ் திட்டம்’ என்ற தனித்துவமான முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் வகையில், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானிய நாட்டு இராணுவங்கள்  இணைந்து முதலாவது முப்படை வான்வழி தாக்குதல் பயிற்சியினை மேற்கொண்டுள்ளன.
  • சிறையில் உள்ள ஈரான் நாட்டினைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்றவருமான நர்கிஸ் முகமதி அவர்களுக்கு ஹார்மனி அறக்கட்டளையின் 2023 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.
    • ஈரானிய ஆட்சியை எதிர்த்து, மனித உரிமைகளுக்காகப் போராடிய முகமதி அவர்களின் துணிச்சலை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதானது. வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்