TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 31 , 2023 263 days 187 0
  • பெங்களூருக்கு அருகில் உள்ள கைபேசி பாகங்கள் ஒருங்கு சேர்ப்பு ஆலையை விற்பனை செய்வதற்கு விஸ்ட்ரான் கார்ப் நிறுவனம் ஒப்புதல் அளித்ததை அடுத்து டாடா குழுமம் விரைவில் இந்தியாவின் முதல் ஐபோன் உற்பத்தியாளராக மாற உள்ளது.
  • மலேசியா அரசானது தெற்கு மாகாணமான ஜோகூரைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் என்பவரை தனது அடுத்த மற்றும் 17வது மன்னராக அறிவித்து உள்ளது.
  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஜியோஸ்பேஸ்ஃபைபர் எனப்படுகின்ற தனது செயற்கைக் கோள் இணையச் சேவையினை இந்தியாவின் "தொலைதூரப் பகுதியில்" உள்ள நான்கு மாவட்டங்களில் சோதனை செய்துள்ளது.
  • 14 மாவட்டங்களிலும் தனித்தன்மைத் தரக்குறியீடு (ஹால்மார்க்கிங்) வழங்கீட்டு மையங்களைக் கொண்ட இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்