நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகமானது, இணைய வழி வர்த்தக தளங்களால் பின்பற்றப்படும் நியாயமற்ற நடைமுறைகளைத் தடுப்பதற்காக நுகர்வோருக்கு எளிதான தீர்வுகளை வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டு தகவல் ஏய்ப்பு மறை படிவங்கள் குறித்த வெளிப்படுத்துதல் ஹேக்கத்தானைத் தொடங்கி உள்ளது.
மூன்றாவது வெடிமருந்துகள் கொண்ட கடற்கணை மற்றும் ஏவுகணை (ACTCM) கப்பலான LSAM 17 (யார்டு 127) சமீபத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது.
16வது நகர்ப்புறப் போக்குவரத்து இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சியானது (2023) புது டெல்லியில் நடைபெற்றது.
இந்தியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகள் ‘காஷிண்ட் 2023 பயிற்சி’ எனப்படும் 7வது கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அவரது சக பொருளாதார நிபுணர் ரோஹித் லம்பாவுடன் இணைந்து எழுதிய ‘Breaking the Mould: Reimagining India’s Economic Future' என்றப் புத்தகம் ஆனது டிசம்பர் 07ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது.