அனைத்து ஊடக தளங்களிலும் பரவும் செய்திகளில் மாநில அரசு தொடர்பாக வரும் போலிச் செய்திகள், வகுப்புவாதம் சாரந்த தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளைத் தடுப்பதற்காக உண்மை தகவல் சரிபார்ப்புப் பிரிவை அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்வதேச சூரியசக்தி கூட்டணியானது, தான் உருவாக்கிய பண வழங்கீட்டு உத்தரவாத நிதி எனப்படும் உலகளாவிய சூரியசக்தி நிதி 35 மில்லியன் டாலர் மூலதனப் பங்களிப்பினை பெற உள்ளது என்று அறிவித்துள்ளது.
ஐக்கியப் பேரரசானது, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் அரசு அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைத்து இரண்டு நாட்கள் அளவிலான செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டினைச் சமீபத்தில் நடத்தியது.
நோக்கியா நிறுவனமானது, இந்தியாவில் முதலாவது Wi-Fi 6 அகலப்பட்டை சேவை வலையமைப்பினைத் தொடங்குவதற்கு டாட்டா பிளே ஃபைபர் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.