G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியத் தரநிலை வாரியமானது (BIS) 2023 ஆம் ஆண்டு G20 அமைப்பின் தரநிலை பேச்சுவார்த்தையினை ஏற்பாடு செய்தது.
திருமதி சைமா வாஸெட், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான அடுத்தப் பிராந்திய இயக்குநராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் நந்தினி தாஸ், 'Courting India: England, Mughal India and the Origins of Empire' என்ற அவரது புத்தகத்திற்காக 2023 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கலாச்சாரப் புரிதலுக்கான பிரிட்டிஷ் அகாடமி புத்தகப் பரிசினை வென்றுள்ளார்.
14 ஆண்டு கால அளவிலான நாய்களின் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பயனாக, அந்நாட்டில் காணப்படும் அனைத்துத் தெருநாய் இனங்களுக்கும் கருத்தடை செய்து தடுப்பூசி போட்ட உலகின் முதல் நாடாக பூடான் மாறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) என்பதன் பெயர் சுருக்கமானது கோலின்ஸ் அகராதியின் 2023 ஆம் ஆண்டின் சிறந்த சொல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து அரசானது, இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி வரையில் அந்த நாட்டிற்கான நுழைவு இசைவுச் சீட்டுகளை ரத்து செய்துள்ளது.
முகமது ஷமி, உலகக் கோப்பைப் போட்டியில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜாகீர் கான் (44), ஜவகல் ஸ்ரீநாத் (44) ஆகியோரை விஞ்சி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் முன்னணி வீரர் என்ற பெருமையினை பெற்றுள்ளார்.
அண்டார்டிகா பகுதியின் மேல் உள்ள ஓசோன் துளையானது சுமார் 26 மில்லியன் சதுர கிலோ மீட்டர் அளவை எட்டியுள்ளதையடுத்து, இது மிகப்பெரிய ஓசோன் துளையாக கருதப் படுகிறது.