சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் சான்சிபார் நகரில் ஒரு வளாகத்தினைத் திறந்து வைத்ததன் மூலம் சர்வதேச வளாகத்தைத் திறந்த முதல் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆக மாறியுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தினைச் சேர்ந்த (CMFRI) இளம் நிபுணரான ஆல்வின் ஆன்டோ, ஆராய்ச்சி பிரிவில் 2023 ஆம் ஆண்டிற்கான சூழலியல் ஆய்வுகளுக்கான மதிப்புமிக்க ஹஸ்முக் ஷா நினைவு விருதைப் பெற்றுள்ளார்.
நிலம் சார் போர் ஆய்வு மையத்துடன் (CLAWS) இணைந்து இந்திய இராணுவத்தினால் நடத்தப்படுகின்ற 2023 ஆம் ஆண்டு சாணக்யா பாதுகாப்பு பேச்சுவார்த்தை ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்திய அரசாங்கமானது, அமெரிக்க நகரமான சியாட்டில் நகரில் தனது ஆறாவது தூதரகத்தினை திறப்பதற்கான திட்டத்தினை அறிவித்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா தனது முதல் தூதரை சியாட்டில் நகரில் நியமித்துள்ளது.
மலேசியாவின் ஜோஹர் நகரில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை போட்டியில் இந்திய இளையோர் ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தினை வென்றது.
உலகின் மிக நீண்ட காலம் (19 ஆண்டுகள்) பதவி வகித்த பெண் அரசாங்கத் தலைவரான வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களின் புகைப்படம் ஆனது, சமீபத்தில் டைம் இதழின் அட்டைப் பக்கத்தில் பதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய கட்கா சாம்பியன்ஷிப் போட்டியில் நியூயார்க் நகர அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
பிரபல சீக்கியத் தற்காப்புக் கலைகளுக்கான முதல் அமெரிக்க தேசிய சாம்பியன் ஷிப் போட்டி இதுவாகும்.
உலக உள்ளூர் உற்பத்தி மன்றம் (WPLF) ஆனது, நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்றது.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 07 ஆம் தேதியன்று சிசு பாதுகாப்பு தினம் கொண்டாடப் படுகிறது.