வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) ஆனது, புதுப்பித்தல் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கத்தின் (AMRUT) கீழ் “Women for Water, Water for Women Campaign” என்ற அதிகாரமளித்தல் முன்னெடுப்பினை தொடங்கி உள்ளது.
மூத்த ஆட்சிப்பணி அதிகாரி ஹீரலால் சமரியா மத்திய தகவல் ஆணையத்தின் தலைவராகப் பதவியேற்று உள்ளார்.
இப்பதவியை வகிக்கும் முதல் தலித் நபர் இவரே ஆவார்.
கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT) ஆனது, ATMAN (காற்றுத் தரக் குறிகாட்டிகளைக் கண்காணிப்பதற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள்) எனப்படும் ஒரு புதிய சிறப்பு மையத்தினை நிறுவியுள்ளது.
இது காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக குறைந்த விலையிலான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உணர்விகளின் உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு / இயந்திரக் கற்றல் திறன்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.
பாரத் பொட்டானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமானது, குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் அமைந்த கோண்டல் எனுமிடத்தில் மரச்செக்கு மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய் உற்பத்திச் செயல்முறையாக்க ஆலையினைத் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஒரு மாதத்தில் 16.1 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) சரக்குகளை கையாண்ட இந்தியாவின் முதல் துறைமுகமாக முந்த்ரா துறைமுகம் மாறியுள்ளது.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக சதங்கள் (49) அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணியானது, ஜப்பான் அணியினை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் கோப்பையை வென்றது.
மாண் தீவில் நடைபெற்ற FIDE கிராண்ட் சுவிஸ் சதுரங்கப் போட்டியில் விதித் குஜ்ராத்தி மற்றும் R. வைஷாலி முன்னணி இரண்டு பட்டங்களை வென்றுள்ளனர்.
R. வைஷாலி மற்றும் R. பிரக்ஞானந்தா ஆகியோர் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சகோதர-சகோதரி இணையாக வரலாறு படைத்துள்ளனர்.