TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 12 , 2023 379 days 248 0
  • மாநிலத்தின் பொறுப்புணர்வு வாய்ந்த சுற்றுலா திட்டத்தினால் வெற்றிகரமாக மேல் தரப்படுத்தப்பட்ட அதன் நிலையான மற்றும் பெண்களை உள்ளடக்கிய பல்வேறு முன்னெடுப்புகளுக்காக, 2023 ஆம் ஆண்டிற்கான உலகளாவியப் பொறுப்புணர்வு வாய்ந்த சுற்றுலா விருதினை கேரளா வென்றது.
  • அதானி பசுமை ஆற்றல் லிமிடெட் நிறுவனமானது, 8.4 ஜிகாவாட் நிறுவப்பட்ட திறன் வரம்பினை எட்டியதையடுத்து இந்தியாவின் மிகப்பெரிய பசுமை எரிசக்தி நிறுவனமாக மாறியுள்ளது.
  • தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தின் (NMDC) துணை நிறுவனமான லெகசி இரும்புத் தாது லிமிடெட் நிறுவனமானது, மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள மவுண்ட் செலியா தங்க சுரங்கத்தில் அதன் சுரங்கச் செயல்பாடுகளைத் தொடங்க உள்ளது.
  • சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் (ISA) 95வது உறுப்பினராக சிலி இணைந்துள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 09 ஆம் தேதியன்று உத்தரகாண்ட் மாநில ஸ்தாபன தினமாக அல்லது உத்தரகாண்ட் திவாஸ் ஆக கொண்டாடப்படுகிறது.
    • உத்தரகாண்ட், 2000 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் தேதியன்று, பிரிக்கப்படாத உத்தரப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்டு இந்தியாவின் 27வது மாநிலமாக உருவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்