தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ராவ் பகதூர் குரூஸ் பெர்னாண்டஸ் சிலையை தமிழக முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து, கடற்கரையில் அமைந்த இந்த நகரத்திற்குக் குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புகளுக்காக அவர் பிரபலமாக அறியப் படுகிறார்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மிட்டி சிற்றுண்டிச் சாலையின் புதிய கிளையை இந்திய தலைமை நீதிபதி அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
இந்தியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள இந்த சிற்றுண்டிச் சாலையில் பிரத்தியேகமாக மாற்றுத் திறனாளிகள் பணியமர்த்தப் படுகின்றனர்.
இந்தியக் கடற்படை மற்றும் வங்கதேசக் கடற்படை ஆகியவற்றிற்கு இடையேயான BONGOSAGAR-23 எனப்படும் 4வது இருதரப்புப் பயிற்சி மற்றும் இரு கடற்படைகளின் 5வது ஒருங்கிணைந்த ரோந்து (CORPAT) பயிற்சி ஆகியவை வடக்கு வங்காள விரிகுடா பகுதியில் நடத்தப்பட்டது.
சாம்சங் நிறுவனமானது, ChatGPT போன்ற சாம்சங் காஸ் எனப்படும் தனது சொந்த ஆக்கமிக்க செயற்கை நுண்ணறிவு மாதிரியை 2023 ஆம் ஆண்டு சாம்சங் செயற்கை நுண்ணறிவு மன்றத்தில் வெளியிட்டது.