TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 19 , 2023 372 days 255 0
  • மத்திய அரசின் நலத்திட்டங்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அது பற்றி விழிப்பு உணர்வு அளிக்கவும் நாடு முழுவதும் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா எனும் யாத்திரை  தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தியா- பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு இடையேயான எரிசக்தி பேச்சு வார்த்தையின் 6வது உயர்நிலைச் சந்திப்பானது, ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள OPEC செயலகத்தில் நடைபெற்றது.
  • பொருளாதாரக் குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைவிலங்கிடக் கூடாது என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
    • அது சட்ட உட்கூறிலிருந்து ‘பொருளாதாரக் குற்றங்கள்’ என்ற வார்த்தைகளை நீக்குவதற்கு ஏற்ப பாரதீய நாகரீக சுரக்சா சன்ஹிதா (2023) என்ற மசோதாவின் 43(3)வது பிரிவைத் திருத்தியமைக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.
  • அசோக் லேலண்ட் நிறுவனம் ஆனது, AVTR 1922 என்று பெயரிடப்பட்ட திரவமாக்கப் பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் 12 போக்குவரத்து சரக்குந்துகள் கொண்ட இந்தியாவின் முதல் தொகுதியைத் தயாரித்துள்ளது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெரினாக் தேயிலை, லால் சாவல் (சிகப்பு அரிசி), புரான்ஷ் பழச்சாறு மற்றும் அல்மோரா லகோரி மிளகாய் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடுகள் பதிவகத்தின் மதிப்புமிக்க புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • வீரேந்திர சேவாக் (IND), டயானா எடுல்ஜி (IND) மற்றும் அரவிந்த டி சில்வா (SL) ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் சபையின் புகழ் மன்றத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • எடுல்ஜி இந்தப் பெருமையைப் பெற்ற முதல் இந்தியப் பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • “ஃபெம்மே ஏ லா மாண்ட்ரே” (“கடிகாரம் அணிந்த பெண்மணி”) எனப்படும் பாப்லோ பிக்காசோவின் புகழ்பெற்ற ஓவியமானது நியூயார்க் நகரில் நடைபெற்ற சோதேபி கழகத்தின் ஏலத்தில் சாதனை மதிப்பாக 139 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
  • ஐக்கியப் பேரரசின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் அந்நாட்டின் புதிய வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியப் பந்துவீச்சாளர் முகமது ஷமி சர்வதேச ஒருநாள் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்