நாட்டில் குற்றங்களை துப்பறிகின்ற கருவிகள் வரிசையில் முதல் முறையாக தெலுங்கானா காவல்துறை முக அங்கீகார முறையை ஆரம்பித்துள்ளது. இந்த மென்பொருள் TSCOP என்கிற தெலுங்கான மாநில காவல்துறையின் கைபேசி செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் களப் பணியாற்றும் காவல் துறை பணியாளர்கள் குற்றவியல் தரவு மையத்தை எங்கிருந்தாலும் அணுகி சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகத்தை சரிபார்க்க முடியும்.
ஆப்பிள் நிறுவனம் 1 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடைய முதல் அமெரிக்க பொது வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகள் 2.8 சதவிகிதம் அதிகரித்து 207.05 டாலர்கள் என்ற அளவில் உயர்ந்துள்ளது.