TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 21 , 2023 242 days 204 0
  • “இந்தோ-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை 2023” (IPRD-2023) எனப்படும் இந்தியக் கடற்படையின் மூன்று நாட்கள் அளவிலான வருடாந்திர உயர்மட்ட பிராந்திய உத்திச்சார் பேச்சுவார்த்தை ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறையைச் சேர்ந்த மூத்த இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியான அலோக் ஷர்மா சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 37வது காலாட்படை தளபதிகள் மாநாடானது மத்தியப் பிரதேச மாநிலத்தின் மோவ் நகரில் உள்ள காலாட்படை பள்ளியில் நடைபெற்றது.
  • 3வது ஹாக்கி இந்தியா – துறைகளுக்கிடையேயான தேசிய முதுநிலை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியானது (2023) புது டெல்லியில் உள்ள சிவாஜி அரங்கில் தொடங்கப்பட்டது.
  • ஆசியான் அமைப்பின் 10வது பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு – பிளஸ் (ADMM-Plus) நிகழ்ச்சியானது, இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்றது.
  • பாகிஸ்தானைச் சேர்ந்த தூய ஆற்றல் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனமான ஷீ-கார்ட் ‘பருவநிலை அறிமுக தள ஆசிய-பசிபிக்’ இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
  • ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு 2023 என்ற மாநாட்டினை அமெரிக்கா சமீபத்தில் நடத்தியது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழுவானது, அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்போதைய ஒதுக்கீட்டு விகிதத்தினை 50 சதவிகிதம் அதிகரிப்பதற்கான முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பின் இந்தியப் பசுமைக் கட்டிட சபையானது உள்நாட்டு வீட்டுவசதித் துறையில் நிலையான மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த கட்டுமானங்களை கட்டமைக்க ஊக்குவிப்பதற்காக, ‘நெஸ்ட்’ என்ற மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கீட்டு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • டேக்வாண்டோ மூலம் உலகெங்கிலும் உள்ள அகதி விளையாட்டு வீரர்கள் மற்றும் அகதிகளை ஆதரிப்பதற்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பினை அங்கீகரிப்பதற்காக டேக்வாண்டோ மனிதநேய அறக்கட்டளைக்கு (THF) 2023 ஆம் ஆண்டு ஒலிம்பிக் கோப்பை வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய வானியல் சாகச வீராங்கனை (ஸ்கைடைவர்) ஷீடல் மகாஜன், எவரெஸ்ட் சிகரத்தின் முன்பகுதியில் 21,500 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்த உலகின் முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்து உள்ளார்.
  • 11 ஆட்டங்களில் 765 ரன்களை குவித்த இந்திய வீரர் விராட் கோஹ்லி 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
    • இவர் 2003 உலகக் கோப்பைப் போட்டியில் 673 ரன்களை அடித்த சச்சின் டெண்டுல்கரின் முந்தைய சாதனையை முறியடித்தார்.
  • யுனெஸ்கோ அமைப்பின் அறிவிப்பின் படி, நவம்பர் 18 ஆம் தேதியானது, சர்வதேச இஸ்லாமிய கலை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்