ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் இருந்த 10 மசோதாக்கள் தமிழக சட்ட சபையின் சிறப்புக் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டன.
1925 இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ், திருமணமான மகன் இறந்துவிட்டால், அந்த மகனின் தாயாருக்கு அந்தச் சொத்தின் மீது உரிமை கிடையாது, மாறாக மற்ற வாரிசுகளான விதவை மனைவியோ, குழந்தைகளோ இல்லை என்றால் மட்டுமே அந்த தாயார் உரிமை கோர முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன், ஆளண்டாப் பட்சி எனும் அவரது தமிழ் புதினத்தின் Fire Bird என்ற பெயரிலான ஆங்கில மொழிபெயர்ப்பிற்காக வேண்டி இலக்கியத்திற்கான மதிப்புமிக்க JCB பரிசினை வென்றுள்ளார்.
புகழ்பெற்றக் கலையியல் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான பிரிஜேந்தர் நாத் கோஸ்வாமி சமீபத்தில் காலமானார்.
கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தனது தொழில்முறை வாழ்க்கையை செலவிடச் செய்வதற்காக அவர் 1958 ஆம் ஆண்டில் குடிமைப் பணிப் பதவியை விட்டு விலகினார்.
நிகாரகுவா நாட்டினைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் 2023 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தினை வென்றுள்ளார்.
இலண்டனில் அமைந்துள்ள சொகுசு பயணம் குறித்த இதழான கோண்டே நஸ்ட், 2024 ஆம் ஆண்டிற்கான, ஆசியாவில் பயணம் மேற்கொள்ள மிகச் சிறந்த இடங்களில் ஒன்றாக கொச்சின் நகரைப் பட்டியலிட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் அகராதியானது, ‘hallucinate’ என்ற சொல்லினை 2023 ஆம் ஆண்டின் சிறந்த சொல்லாக அறிவித்துள்ளது.