TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 28 , 2023 234 days 203 0
  • சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள இந்திரா நகர் சமிக்ஞை விளக்குப் பகுதி  அருகே அமைக்கப்பட்டுள்ள சென்னையின் முதல் ‘U’ வடிவிலான மேம்பாலத்தினைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
  • சென்னையில் உள்ள மாகாண (பிரசிடென்சி) கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் V.P.சிங் அவர்களின் சிலையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
  • கடலோரக் கர்நாடகப் பகுதிகளில் பிரபலமாக உள்ள கம்பலா பந்தயம் எனப்படும் எருமை பந்தயத்தின்  முதல் போட்டியினை பெங்களூரு சமீபத்தில் நடத்தியது.
  • 8வது இந்திய நீர்வளத் தாக்கம் குறித்த உச்சிமாநாடானது (IWIS) புது டெல்லியில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்வின் கருத்துரு, 'நிலம், நீர் மற்றும் நதிகளின் மேம்பாடு' என்பதாகும்.
  • 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற யுனெஸ்கோ அமைப்பின் 40வது பொது மாநாட்டு அமர்வில் அறிவிக்கப்பட்ட உலக ஆலிவ் மர தினமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்