TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 30 , 2023 232 days 213 0
  • "Authentic" என்ற சொல்லானது, மெரியம் வெப்ஸ்டர் அகராதியின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல்லாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • சாது T.L. வாஸ்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு, உத்தரப் பிரதேச அரசானது நவம்பர் 25 ஆம் தேதியினை "அசைவமில்லாத நாள்" ஆக அறிவித்துள்ளது.
  • ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசானது, புது டெல்லியில் உள்ள தனது தூதரகத்தினை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
  • உலகளாவியச் சர்க்கரை உற்பத்தித் துறையை வழிநடத்தும் விதமாக சர்வதேச சர்க்கரை அமைப்பின் (ISO) 2024 ஆம் ஆண்டிற்கான தலைமை பொறுப்பினை இந்தியா ஏற்றுள்ளது.
  • சென்னையைச் சேர்ந்த அனுவமிக்க மூத்த வீராங்கனை வித்யா பிள்ளை, கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற IBSF 6-ரெட் ஸ்னூக்கர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை கைப்பற்றினார்.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் மலைப்பாங்கான கிஷ்த்வார் மாவட்டத்தின் குங்குமப் பூவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய மற்றும் சீன குடிமக்களுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் தனது நாட்டிற்குள் அனுமதிக்க உள்ளதாக மலேசியா அரசு சமீபத்தில் அறிவித்தது.
    • இந்தப் புதிய நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத விதியின் கீழ், இந்தியப் பயணிகள் நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் 30 நாட்கள் வரை அந்நாட்டில் தங்கலாம்.
  • ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 29 ஆம் தேதியன்று சர்வதேசப் பெண்களின் மனித உரிமைப் பாதுகாவலர்களின் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • தேசியக் கணினிப் பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 30 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்