சித்திப்பேட்டை மாவட்டத்தின் புருக்பள்ளி எனுமிடத்தில் முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்ப முறையில் கட்டமைக்கப்பட்ட உலகின் முதல் கோவிலை தெலுங்கானா அரசு திறந்து வைத்துள்ளது.
டாடா ஆலோசனை சேவை வழங்கீட்டு நிறுவனமானது (TCS), ஸ்பெயின் நாட்டில் சேவை வழங்கல் தரம் மற்றும் வணிகப் போட்டித்தன்மையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
G20 அமைப்பு நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது உலகளாவிய எண்ணிமப் பொது உள்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக சமூக தாக்க நிதியின் உருவாக்கத்தினை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக எண்ணிமப் பொது உள்கட்டமைப்பு களஞ்சியம் மற்றும் சமூக தாக்க நிதியம் ஆகியவை தொடங்கப்பட்டன.
இராணுவ மருத்துவப் படை அதிகாரி கர்னல் சுனிதா B.S., டெல்லி இராணுவக் குடியிருப்புப் பகுதியின், ஆயுதப் படை மாற்று மையத்தில் படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்று உள்ளார்.
சூர்ய கிரண் எனப்படும் 17வது கூட்டு இராணுவப் பயிற்சியில் நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவங்கள் உத்தரகாண்டில் பித்தோர்கார்ஹியில் பங்கேற்கின்றன.
இந்தியக் கடலோரக் காவல்படையானது, 9வது தேசிய அளவிலான மாசுபாடு எதிர் நடவடிக்கை பயிற்சியினை (NATPOLREX-IX) குஜராத்தில் நடத்தியது.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையின் பங்குதாரர்கள் கழகம் (அசோசெம்) ஏற்பாடு செய்த 4வது பன்முகத்தன்மை மற்றும் உள்ளார்ந்த சிறப்பு விருதுகள் மற்றும் மாநாட்டில் REC லிமிடெட் நிறுவனமானது, “பன்முகத் தன்மை மற்றும் உள்ளார்ந்த தன்மை கொண்ட கொள்கைகளுக்கான சிறந்த வேலைவாய்ப்பு வழங்குநர்” என்ற விருதைப் பெற்றுள்ளது.
பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஷ்தா முகர்ஜி ‘’Pranab, My Father: A Daughter Remembers’ என்ற தலைப்பிலான புத்தகத்தினை எழுதியுள்ளார்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமானது, அதன் வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக 6Eskai எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி சார்ந்த உரையாடு மென்பொருளினை அறிமுகப் படுத்தி உள்ளது.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பின் (FICCI) 2023-24 ஆம் ஆண்டிற்கான தலைவராக அனிஷ் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் (2023) ஆடவருக்கான 25 மீட்டர் விரைவு சுழல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீரர் அனிஷ் பன்வாலா வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
ISSF உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் வரலாற்றில் ஆடவருக்கான 25 மீட்டர் விரைவு சுழல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.