TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 3 , 2023 229 days 238 0
  • BMJ இதழில் வெளியிடப்பட்ட அழகு விளம்பரப் பணி குறித்த ஆய்வின்படி, இந்தியாவில் பதிவான 2.18 மில்லியன் உயிரிழப்புகளுக்கு (ஆண்டிற்கு) அனைத்து மூலங்களில் இருந்து வரும் வெளிப்புற காற்று மாசுபாடு தான் காரணமாக உள்ளது.
    • தொழில்துறை, மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் காற்று மாசுபாடு ஆனது உலகளவில் ஆண்டிற்கு 5.1 மில்லியன் கூடுதல் இறப்புகளுக்கு காரணமாகிறது என்று இந்த ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
  • பண்ணை மற்றும் சேவைத் துறைகள் மற்றும் நுகர்வோர் செலவினங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் நிலையான வீழ்ச்சி இருந்தபோதிலும், தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி, 2023 ஆம் ஆண்டு ஜூலை-செப்டம்பர் மாதம் வரையான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததை விட 7.6% அதிகரித்துள்ளது.
  • முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் தனது 100வது வயதில் காலமானார்.
    • வியட்நாம் போரின் போது கம்போடியா மீது நிகழ்த்தப்பட்ட அமெரிக்காவின் குண்டு வீச்சு, 1973 ஆம் ஆண்டு சிலி இராணுவ சதியில் அமெரிக்காவின் ஈடுபாடு, அர்ஜென்டினாவின் இராணுவ ஆட்சிக்கு அமெரிக்காவின் மறைமுக ஆதரவு மற்றும் முக்கியமாக 1971 ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவு ஆகியவற்றின் பின்னணியில் அவரும் ஒருவராக இருந்தார்.
  • ஓரினச் சேர்க்கை திருமணத்தினை அங்கீகரித்த முதல் தெற்காசிய நாடாக நேபாளம் மாறியுள்ளது.
    • ஆசியாவில் ஓரினச் சேர்க்கை திருமணத்தினைச் சட்டப்பூர்வமாக்கிய ஒரே நாடு தாய்வான் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்