கேரளாவின் பொறுப்புணர்வுமிகு சுற்றுலா (RT) திட்டம் ஆனது, ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பின் (UNWTO) உலகளாவிய நேர்வு ஆய்வுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவின் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத் திட்டம் ஆனது இந்தப் பட்டியலில் இடம் பெற்ற இந்தியத் திட்டம் ஆகும்.
துபாயின் நிலப்பரப்பில் 10% வரையிலான பரப்பில் அமைந்துள்ள அல் மர்மூம் பாலைவனப் பாதுகாப்புக் காப்பகம் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய எல்லைகள் இல்லாத இயற்கை காப்புப் பகுதியாகும்.
இது மணல் நிறைந்த நிலப்பரப்புகளை கண்டு களிக்கவும், மணல் குன்றுகள் வழியாக சைக்கிள் ஓட்டுதல் சாகசங்களை மேற்கொள்ளவும், வனத்தில் உல்லாசப் பயணங்கள் மேற்கொள்ளவும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குகிறது.