இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபையின் முதல் பெண் தலைமை இயக்குநராக காஞ்சன் தேவி பொறுப்பேற்றுள்ளார்.
1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதும், இந்தியாவில் வனவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள மிகப்பெரிய அமைப்புமான இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விச் சபையானது மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
கேப்டன் கீதிகா கௌல், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த போர்க்களமான சியாச்சின் பகுதியில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் மருத்துவ அதிகாரி என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியில், பொறியாளர்கள் பிரிவிலிருந்து கேப்டன் சிவா சௌஹான் நியமிக்கப் பட்டதற்கு அடுத்ததாக இந்த நியமனம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த படைத்தளபதி பிரெர்னா தியோஸ்டேல் INS சென்னை என்ற கடற்படை போர்க் கப்பலின் முதல் துணைநிலை தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
அவர் டூபோலெவ் Tu-142 என்ற கடல் சார் உளவு விமானம் மற்றும் P8I எனப்படும் மற்றொரு கடல் சார் உளவு விமானம் ஆகியவற்றின் முதல் பெண் கண்காணிப்பாளர் ஆவார்.
அமெரிக்காவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியான சாண்ட்ரா டே ஓ’கானர் அவரது 93 வது வயதில் காலமானார்.
அவர் 1981 ஆம் ஆண்டில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப் படுவதற்கு அதிபர் ரொனால்ட் ரீகனால் பரிந்துரைக்கப்பட்டார்.