சிறந்தப் பாதுகாப்பு அமைப்பிற்கானப் புத்தாக்கம் (iDEX) என்ற பாதுகாப்புத் துறையின் முதன்மையான முன்னெடுப்பானது அதன் 300வது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
நன்ஹே ஃபரிஸ்டே என்பது தொலைந்து போன அல்லது தங்களது குடும்பங்களை விட்டு பிரிந்த குழந்தைகளை மீண்டும் அவர்களுடன் இணைப்பதற்காக இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மேற்கொண்ட ஒரு முன்னெடுப்பு ஆகும்.
ஊபர் நிறுவனம் தனது உலகளாவிய முதன்மையான மின்சார வாகன வாடகைச் சேவையான ஊபர் கிரீன் சேவையை கர்நாடகாவின் பெங்களூருவில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
மும்பையில் ஏற்கனவே இயங்கி வரும் ஊபர் க்ரீன் வசதியை அடுத்து இரண்டாவது சேவையை இது குறிக்கிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகமானது Z எனும் எழுத்தின் தலைமுறையில் மொழியியல் தேர்வுகளைப் பிரதிபலிக்கிற "ரிஸ்" (Rizz) என்ற வார்த்தையினை இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக வெளியிட்டுள்ளது.
இது மற்றொரு நபரை ஈர்க்கும் அல்லது கவர்ந்திழுக்கும் ஒருவரின் திறனை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும்.
இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி அளவிற்குச் சந்தை மூலதனத்தினைத் தாண்டிய 8வது நிறுவனமாக பார்தி ஏர்டெல் மாறியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்யுஎல் (இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்), இன்ஃபோசிஸ் மற்றும் ஐடிசி (இந்தியப் புகையிலை நிறுவனம் / India Tobacco Company) ஆகியவை இதர மற்ற நிறுவனங்கள் ஆகும்.
பஜாஜ் குழுமமானது சந்தை மூலதனத்தில் ரூ.10 லட்சம் கோடியைக் கடந்த ஐந்தாவது வணிக நிறுவனமாக மாறியுள்ளது.
முன்னதாக, டாடா குழுமம், முகேஷ் அம்பானி குழுமம் (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்), ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் அதானி குழுமம் ஆகியவை இந்த மைல்கல்லை எட்டியுள்ளன.
6வது உலகப் பேரிடர் மேலாண்மை மாநாடானது உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள டேராடூனில் 'காலநிலை நடவடிக்கையை வலுப்படுத்துதல்' என்ற தலைப்பில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் அமைப்புகளுக்கு வெளியே நடைபெறும் பேரிடர் மேலாண்மை குறித்த மிகப்பெரிய உலகளாவிய மாநாடாக இது உருவெடுத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் தனது நான்காவது பதிவு செய்யப்பட்ட வாகனக் கழிவு (ஸ்கிராப்பிங்) வசதியை (RVSF) சண்டிகரில் திறந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே ஜெய்ப்பூர், புவனேஷ்வர் மற்றும் சூரத் ஆகிய இடங்களில் மூன்று RVSFகளைக் கொண்டுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் காப்பீட்டு நிறுவனங்களான MetLife மற்றும் Prudential Financial Inc ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி LIC நிறுவனம் (503$ பில்லியன் கையிருப்பு) 2022 ஆம் ஆண்டில் உலகின் நான்காவது பெரிய காப்பீட்டு நிறுவனமாக மாறியுள்ளது.
முதல் மூன்று காப்பீட்டாளர்கள் நிறுவனங்களாவன அலையன்ஸ் SE (ஜெர்மனி), சீனா ஆயுள் காப்பீடு மற்றும் நிப்பான் ஆயுள் காப்பீடு (ஜப்பான்) ஆகியவை ஆகும்.
டெய்லர் ஸ்விஃப்ட் என்ற அமெரிக்கப் பெண் பாடகி-பாடலாசிரியர், டைம்ஸ் இதழின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டைம்ஸ் இதழின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்தத் தடகள வீரராக அர்ஜென்டினாவின் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மெஸ்ஸி எட்டாவது முறையாக 2023 ஆம் ஆண்டிற்கான Ballon d'Or விருதை வென்ற பிறகு இச்சாதனை பதிவானது நீடித்துள்ளது.