தனி சோதனைப் பெட்டகங்களில் வைத்து மின்னணு உபகரணங்களைப் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தும் முறையை நீக்கிய இந்தியாவின் முதல் விமான நிலையம் பெங்களூரு விமான நிலையம் ஆகும்.
கெம்பகவுடா சர்வதேச விமான நிலையமானது, தானியங்கிப் பெட்டக சோதனை அமைப்பு மற்றும் முழு உடல் ஊடுருவல் ஆய்வுக் கருவியுடன் ஒருங்கிணைக்கப் பட்ட CTX இயந்திரங்களைப் பயணிகள் மத்தியில் சோதனை செய்யத் தொடங்கி உள்ளது.
ஹம்ஃபெஸ்ட் இந்தியா 2023 மாநாடானது, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசின் சவுஹானால் தொடங்கி வைக்கப் பட்டது.
பயில்முறை வானொலி ஆர்வலர்களுக்கு இது ஒரு விரிவான தளமாக செயல் படுகிறது.
பார்தி குழுமத்தின் ஆதரவுப் பெற்ற OneWeb India நிறுவனம், இந்தியாவில் வணிக ரீதியான செயற்கைக்கோள் அகலப் பட்டை அலைவரிசை சேவைகளைத் தொடங்கச் செய்வதற்கு வேண்டி IN-SPACe அமைப்பிடமிருந்து அங்கீகாரம் பெற்றுள்ளது.
இந்தியாவில் இந்த அனுமதிகளைப் பெற்ற முதல் நிறுவனமாகவும் இந்தியாவின் ஒரே செயற்கைக் கோள் அகலப் பட்டை அலைவரிசை சேவை வழங்குநராகவும் இது உள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையானது 2023 ஆம் ஆண்டு மத்தியப் பல்கலைக் கழகங்கள் (திருத்தம்) மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவின் முதன்மை நோக்கமானது, தெலுங்கானாவில் ‘சம்மக்கா சரக்கா மத்தியப் பழங்குடியினர் பல்கலைக்கழகத்தினை’ அமைப்பதாகும்.
பஞ்சாப் மாநிலத்தினைப் பூர்வீகமாக கொண்ட எழுத்தாளர் மீரா சந்த் (81), மாநிலத்தின் மிகவும் மதிப்புமிக்க கலை விருதான கலாச்சாரப் பதக்கத்தை பெற்ற மூன்று சிங்கப்பூர் நாட்டவர்களில் ஒருவர் ஆவார்.
அவர் நாவலாசிரியர் சுசென் கிறிஸ்டின் லிம் மற்றும் அனுபவமிக்க மலேசிய நடனக் கலைஞர் ஒஸ்மான் அப்துல் ஹமித் ஆகியோருடன் இந்தப் பதக்கத்தினைப் பகிர்ந்து கொண்டார்.