TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 9 , 2023 352 days 226 0
  • உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சஹரன்பூரில் நாட்டின் முதல் சிறப்பு தொலைத் தொடர்பு மையத்தை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
    • இது ரூர்க்கியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சஹாரன்பூர் என்ற வளாகத்தில் அமைந்துள்ளது.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், ஒடிசாவின் சம்பல்பூரில் உள்ள பிரம்மா குமாரி அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ‘புதிய இந்தியாவிற்கான புதிய கல்வி’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
    • இந்தப் பிரச்சாரம் ஆனது, மாணவர்கள் மத்தியில் சிறந்த சமுதாயத்திற்கான ஒரு நல்லுணர்வினை உயர்த்துவதற்கும், அதன் விழுமியங்களை நன்கு வளர்ப்பதற்கும் வேண்டி திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஒலிம்பிக் பதக்கம் வென்ற M. ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்) கேரளாவின் சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்காக வேண்டி மதிப்புமிக்க 35வது ஜிம்மி ஜார்ஜ் அறக்கட்டளை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
    • ஜிம்மி ஜார்ஜ் அறக்கட்டளை விருது என்பது கேரளாவின் விளையாட்டுச் சமூகத்தில் வழங்கப்படும் ஒரு சிறப்புமிக்க அங்கீகாரம் ஆகும்.
  • சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஆசிய மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் குழுவினால் நடத்தப்பட்ட (APC) நான்காவது ஆசிய விருதுகள் விழாவில், ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த இந்திய மாற்றுத் திறனாளி வில்வித்தை வீராங்கனை ஷீதல் தேவிக்கு சிறந்த இளையோர் தடகள வீராங்கனை பட்டம் வழங்கப்பட்டது.
    • ஆசிய மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் குழுவினால் (APC)  ஏற்பாடு செய்யப் பட்ட ஆசிய விருதுகள் விழாவானது, ஆசிய மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் வெகு சிறந்த சாதனைகளைக் கௌரவிக்கும் விழாவாகும்.
  • ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடா ரயில் நிலையத்திற்கு சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளுக்காகவும் அதன் அர்ப்பணிப்புக்காகவும் இந்தியாவின் பசுமைக் கட்டிடக் மன்றமானது அதன் (IGBC) மதிப்புமிக்க பிளாட்டினம் மதிப்பீட்டினை வழங்கியுள்ளது.
    • இது நிலையான நிலைய வசதி, சுகாதார வசதி, உடல்நலம் பேணுதல் மற்றும் துப்புரவு வசதி, ஆற்றல் திறன்பாடு, நீர் திறன், சூட்டிகை மற்றும் பசுமை முயற்சிகள் மற்றும் புதுமை மற்றும் மேம்பாடு உள்ளிட்ட ஆறு சுற்றுச்சூழல் வகைகளை அடிப்படையாகக் கொண்டது.
  • மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்சாரக் கட்டமைப்பு கழக நிறுவனத்திற்கு (PGCIL) 2023 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க SKOCH தங்க விருதானது  வழங்கப்பட்டுள்ளது.
    • 2023 ஆம் ஆண்டு SKOCK Gold Award என்பது சிறந்தப் பங்களிப்புகள் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றங்களை அங்கீகரிக்கிறது.
  • மேகாலயாவின் லகடாங் மஞ்சளுக்கு மதிப்புமிக்க புவிசார் குறியீடு (ஜிஐ) வழங்கப் பட்டுள்ளது.
    • மேலும் மேகாலயாவின் காரோ டக்மாண்டா (பாரம்பரிய உடை), லர்னாய் மட்பாண்டங்கள் மற்றும் காரோ சுபிட்சி (மதுபானம்) ஆகிய இதர மூன்று பொருட்களுக்கும் இக்குறியீடு வழங்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்