இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பானது, சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு 604 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
அந்நியச் செலாவணி இருப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று $600 பில்லியன் மதிப்பிற்கு மேல் இருந்தது.
ஃபெடரல் வங்கியானது, தி பேங்கர் என்ற பத்திரிக்கையின் "ஆண்டின் சிறந்த வங்கி (இந்தியா)" என்ற பட்டத்தினைப் பெற்றுள்ளது.
மோசமான காற்றுத் தரத்துடன், பாகிஸ்தானின் லாகூர் நகரம் உலகளாவிய மாசுக் குறியீட்டில் முதலிடம் பிடித்தது.
தேசியத் தூய்மை கங்கை மற்றும் மிசிசிப்பி நதி நகரங்கள் மற்றும் சிறு நகரங்கள் இயக்கம் (MRCTI) ஆனது துபாயில் நடைபெற்று வரும் 28வது பங்குதாரர்கள் மாநாட்டில் பொது நோக்கத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
நகர்ப்புற நதி மேலாண்மை தொடர்பான பிரச்சனைகளில் ஒத்துழைப்பு வழங்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.