ITC லிமிடெட் நிறுவனமானது, பிரிட்டிஷ் அமெரிக்கப் புகையிலை நிறுவனத்தை (BAT) விஞ்சி உலகின் மூன்றாவது மதிப்பு மிக்க புகையிலைத் தயாரிப்பு நிறுவனமாக மாறியது.
இந்திய சமூக ஆர்வலரான நிகில் டே, அமெரிக்க வெளியுறவுத் துறையினால் சர்வதேச ஊழல் எதிர்ப்பு வாகையராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
‘மார்னிங் கன்சல்ட்’ எனப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆலோசனை வழங்கீட்டு நிறுவனத்தின் கூற்றுப் படி, பிரதமர் நரேந்திர மோடி 76 சதவீத ஆதரவு மதிப்பீட்டுடன் உலகின் மிகவும் பிரபலமான தலைவராக தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளார்.
அவரைத் தொடர்ந்து மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் மற்றும் சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.