சென்னை மற்றும் கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்ட 5G RAN தொழில் நுட்பமானது மேம்படுத்தல் மற்றும் வணிகரீதியான பயன்பாடுகளுக்காக ஒரு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
VINBAX-2023 என்ற 4வது கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய ஆயுதப் படைக் குழு வியட்நாமின் ஹனோய் நகரைச் சென்றடைந்தது.
விலங்குகள் மற்றும் மனித உரிமைகளுக்கும் இடையிலான ஒரு தொடர்பை எடுத்துக் காட்டும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதியன்று சர்வதேச விலங்கு உரிமைகள் தினம் அனுசரிக்கப் படுகிறது.