நாராயண் சேவா சன்ஸ்தானின் தலைவர் பிரசாந்த் அகர்வாலுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் 'சிறந்த ஆளுமை - மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல்' என்ற மதிப்புமிக்க தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மெர்காம் கேப்பிட்டல் குழுமத்தின் சமீபத்தியத் தரவரிசையில், உலகின் மிகப் பெரிய அளவில் சூரிய சக்தி ஒளி மின்னழுத்தத் தகடுகளைத் தயாரிக்கும் அதானி பசுமை எரிசக்தி நிறுவனம் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பழம்பெரும் நடிகர் கபீர் பேடிக்கு, 'ஆர்டர் ஆஃப் மெரிட்' எனப்படும் இத்தாலி நாட்டின் உயரிய குடிமை விருது வழங்கப்பட்டது.
33வது வியாஸ் சம்மான் (2023) விருதானது, புகழ்பெற்ற இந்தி-எழுத்தாளர் புஷ்பா பாரதிக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த விருதானது, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியக் குடிமகன் ஒருவரால் வெளியிடப் பட்ட சிறந்த இந்தி மொழி இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.