இந்திய விண்வெளித் துறையானது, 2035 ஆம் ஆண்டிற்குள் பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை (இந்திய விண்வெளி நிலையம்) உருவாக்க திட்டமிட்டுள்ளது.
தேசியப் புத்தக அறக்கட்டளையினால் புனேவில் ஏற்பாடு செய்யப்பட்ட 3,066 பேர் பங்கேற்புடன் நடைபெற்ற மிகப்பெரிய வாசிப்பு நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக இதே போன்ற சாதனையானது, சீனாவில் ஒரே நேரத்தில் 2,884 வாசகர்கள் கொண்டு நிகழ்த்தப்பட்டது.
ஸெப்டோ செயலியின் நிறுவனர்களான கைவல்யா வோஹ்ரா (21) மற்றும் ஆதித் பாலிச்சா (22) ஆகிய இளம் தொழில்முனைவோர்கள் ஹுருன் இந்தியா நிறுவனத்தின் 30 வயதிற்குட்பட்ட 100 முன்னணி தொழில்முனைவோர் பட்டியலில் (2023) முன்னணி இடங்களைப் பெற்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு ஆகியவற்றின் கூட்டு முன்னெடுப்பான எல்லைகள் கடந்த வரி ஆய்வாளர்கள் (TIWB) திட்டம் ஆனது செயிண்ட் லூசியாவில் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தியா அதன் பங்குதார நிர்வாக அமைப்பாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதை அடுத்து, இந்தத் திட்டத்திற்கான வரி நிபுணர்களை வழங்க உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 15 ஆம் தேதியன்று சர்வதேச தேயிலை தினம் ஆனது கொண்டாடப் படுகிறது.
2005 ஆம் ஆண்டில் முதல் சர்வதேச தேயிலை ஒப்பந்தம் கையெழுத்தானதை நினைவு கூரும் வகையில் மே 21 ஆம் தேதியும் சர்வதேச தேயிலை தினமாக அனுசரிக்கப் படுகிறது.