TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 7 , 2018 2174 days 713 0
  • மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் IMPRINT - II (Impacting Research Innovation and Technology) திட்டத்தின் கீழ் 112 கோடி ரூபாய் மதிப்புள்ள 122 புதிய ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முன்மொழிதலுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • புதுதில்லியில் மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்ற IMPRINT - II உயர்மட்டக் குழுவின் சந்திப்பில் இப்புதிய ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • நிலவுக்கு அனுப்பப்பட உள்ள இந்தியாவின் இரண்டாவது திட்டமான சந்திராயன் - 2 திட்டத்தினை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation - ISRO) ஜனவரி 2019-க்கு தள்ளி வைத்துள்ளது. இத்திட்டம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    • இஸ்ரேல் நிலவிற்கான திட்டத்தினை டிசம்பர் 2018-ல் தொடங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தாமதத்தினால் நிலவின் மீதான மிதமான தலையிறங்குதலில் இந்தியா 4வது இடத்தினை இஸ்ரேலிடம் இழக்க வாய்ப்புள்ளது.
  • சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு 25 விமான நிலையங்கள் மற்றும் 5 துறைமுகங்களில் 165 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான மின்னணு விசா வசதியினை நீட்டித்துள்ளது.
  • தமிழக அரசு சார்பில் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைமை அதிகாரியாக சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் மன்ற கூடுதல் தலைமை நீதிபதி ஏ.ஜாகீர் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்