TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 21 , 2023 340 days 215 0
  • மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் ஆனது, ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தில் உள்ள வடக்கு தாடு (மேற்கு பகுதி) நிலக்கரித் தொகுதியை நெய்வேலி லிக்னைட் கழகம் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
    • தாடு 434.65 மில்லியன் டன்கள் நிலக்கரி இருப்புக்களைக் கொண்டுள்ள நிலையில், மேலும் அதன் உச்ச கட்டத் திறன் ஆண்டிற்கு மூன்று மில்லியன் டன்கள் ஆகும்.
  • இந்திய விமானப் படை நடத்திய அஸ்ட்ராசக்தி பயிற்சியின் போது நிலத்திலிருந்து வானில் பாய்ந்து தாக்கும் (SAM) ஆகாஷ் ஏவுகணை அமைப்பு ஆனது ஈடுபட்டு ஒரே நேரத்தில் நான்கு ஆளில்லா விமானங்களை அழித்தது.
  • "உலகின் மிகப்பெரிய பணியிடம்" என்று அழைக்கப்படும் சூரத் வைர வர்த்தக மையத்தினை (SDB) இந்தியப் பிரதமர் அவர்கள் குஜராத்தில் திறந்து வைத்தார்.
  • கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (IIT) இந்தியாவின் முதலாவது முழுமையாக ஒருங்கிணைக்கப் பட்ட நிலைத்தன்மை கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
  • சமூகப் பங்குச் சந்தைகளில் (SSE) பட்டியலிடப்பட்ட முதல் நிறுவனமாக SGBS உன்னதி அறக்கட்டளை மாறியுள்ளது.
  • ரியல் விஷன் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர், டாக்டர் ஸ்ரீனிவாஸ் நாயக் தாராவத், டெல்லியில் நடைபெற்ற 5வது தேசிய மாநாட்டில் AASRAA அமைப்பின் 2023 ஆம் ஆண்டு தொலைநோக்கு மிக்கத் தலைவர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
  • மிச்சிகன் மாகாணத்தினைச் சேர்ந்த மருத்துவ மாணவி ரிஜுல் மைனி, சமீபத்தில் நியூ ஜெர்சியில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு அமெரிக்க இந்திய அழகிப் போட்டியில் பட்டத்தை வென்றார்.
    • சலோனி ராம்மோகன் மற்றும் சினேகா நம்பியார் ஆகியோர் முறையே பதின்ம வயது அழகி மற்றும் இந்திய அமெரிக்க திருமதி அழகிப் பட்டங்களைப் பெற்றனர்.
  • ரியோ டின்டோ எனப்படுகின்ற ஒரு முன்னணி உலகளாவியச் சுரங்க மற்றும் மூலப் பொருட்கள் நிறுவனமானது, தனது 150வது ஆண்டு நிறைவை இந்திய அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் தலை அறிமுகத்துடன் கொண்டாடியது.
  • இந்தியாவின் முன்னணி ரோபோ தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கேரளாவைச் சேர்ந்த ஜென்ரோபோடிக் இன்னோவேசன்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனர்கள், மதிப்புமிக்க ‘ஃபோர்ப்ஸ் இதழின் 30 வயதிற்குட்பட்ட 30 முன்னணி தொழில் முனைவோர்கள் - ஆசியா 2023’ பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  • தி வீக் இதழின் ஹன்சா ஆராய்ச்சி 2023 அறிக்கையின், 'சிறந்த எழுச்சி பெறும் பல் நோக்கு மருத்துவமனை' பிரிவில் கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ள ஆஸ்டர் மெட்சிட்டி முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்