2023 ஆம் ஆண்டு பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான தளவாடப் பரிமாற்றத்தினை எளிதாக்குதல் (LEADS) தரவரிசையில் கடலோர மாநிலங்கள் குழுவில் தமிழ்நாடு மாநிலம் சிறந்த செயல்திறன் மிக்கதாக அங்கீகரிக்கப் பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது, சாலைகளில் உள்ள அலகுகளுக்கு அனுப்பும் தகவலை மேம்படுத்தும் வகையில், உடனடி உதவிக்காக மேற்கொள்ளப் படும் அவசர அழைப்புகளுக்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக ERS என்ற கைபேசிச் செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் படைப்பிரிவு மற்றும் பணியாளர் கல்லூரியில் படைப் பிரிவு மற்றும் பணியாளர்கள் கல்விப் படிப்பினை மேற்கொண்டு வரும் மூன்று இந்திய ஆயுதப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அவர்களின் சிறந்தச் செயல்பாட்டிற்காக ‘Golden Owl’ விருது வழங்கப்பட்டுள்ளது.
விமானப்படை, இராணுவம் மற்றும் கடற்படைப் பிரிவுகளில் வெளிநாட்டு மாணவ (பயில்நிலை) நிலை அதிகாரிகளில் அந்த மூன்று அதிகாரிகளும் முறையே முதல் இடத்தைப் பிடித்தனர்.
ரியல் விஷன் ஹோம்ஸ் நிறுவனத்தின் தலைவர், டாக்டர் ஸ்ரீனிவாஸ் நாயக் தாராவத், இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற G20 அமைப்பின் முன்னெடுப்பு உச்சி மாநாட்டில் குளோபல் ஐகான் விருதினைப் பெற்றார்.
ஆப்கானிஸ்தான் பெண்கள் திறன் மேம்பாட்டு மையத்திற்கு சர்வதேசப் பாலினச் சமத்துவப் பரிசானது வழங்கப்பட்டுள்ளது.
இது ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் செயல்பட்டு வருகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனமானது 2.7 பில்லியன் அளவுருக்கள் கொண்ட மற்றும் பை-1.5 என்ற மாதிரியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான, பை-2 என்ற ஒரு புதிய சிறிய மொழி மாதிரியை வெளியிட்டுள்ளது.
அசென்ச்சர் நிறுவனம் ஆனது, வணிக மேம்படுத்தலுக்காக மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாக பெங்களூரு நகரில் ஓர் ஆக்கமிக்க செயற்கை நுண்ணறிவு தொழிற்கூடத்தினைத் தொடங்கியுள்ளது.
கம்பிவட இணைப்பு சாராத திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு (WPC) மற்றும் கம்பிவட இணைப்பு சாராதக் கண்காணிப்பு அமைப்பு (WMO) ஆகியவை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதியன்று சர்வதேச கண்காணிப்பு நிலைய (IMS) தினத்தைக் கொண்டாடுகின்றன.