TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 24 , 2023 208 days 147 0
  • உலக சுகாதார அமைப்பின் பிராந்திய (தென்-கிழக்கு ஆசியா) இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங்கிற்கு, நாட்டிற்கு அவர் ஆற்றிய சிறப்பானச் சேவைகளுக்காக பூடானின் தேசிய தகுதி சார் (ஆர்டர் ஆஃப் மெரிட்) தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
    • அவர் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் முதல் பெண் பிராந்திய இயக்குனர் ஆவார்.
  • இண்டிகோ விமான நிறுவனம் ஆனது, ஓராண்டில் 100 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்ற முதல் இந்திய விமான நிறுவனம் என்ற வரலாற்றினைப் படைத்துள்ளது.
  • சர்வதேச நாணய நிதியம் ஆனது, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்தியாவின் பரிமாற்ற விகித நிலையை “மாறுநிலை” வீதம் என்ற நிலையில் இருந்து “நிலைப்படுத்தப்பட்ட வீதம்” என மறுவகைப்படுத்தியுள்ளது.
  • தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோ அமைப்பின் அரசுகளுக்கிடையேயான குழுவின் 18வது அமர்வு ஆனது (2024) போட்ஸ்வானா குடியரசின் கசானே நகரில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்