உலக சுகாதார அமைப்பின் பிராந்திய (தென்-கிழக்கு ஆசியா) இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங்கிற்கு, நாட்டிற்கு அவர் ஆற்றிய சிறப்பானச் சேவைகளுக்காக பூடானின் தேசிய தகுதி சார் (ஆர்டர் ஆஃப் மெரிட்) தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
அவர் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் முதல் பெண் பிராந்திய இயக்குனர் ஆவார்.
இண்டிகோ விமான நிறுவனம் ஆனது, ஓராண்டில் 100 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்ற முதல் இந்திய விமான நிறுவனம் என்ற வரலாற்றினைப் படைத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் ஆனது, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்தியாவின் பரிமாற்ற விகித நிலையை “மாறுநிலை” வீதம் என்ற நிலையில் இருந்து “நிலைப்படுத்தப்பட்ட வீதம்” என மறுவகைப்படுத்தியுள்ளது.
தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோ அமைப்பின் அரசுகளுக்கிடையேயான குழுவின் 18வது அமர்வு ஆனது (2024) போட்ஸ்வானா குடியரசின் கசானே நகரில் நடைபெற உள்ளது.