TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 25 , 2023 207 days 159 0
  • உயர்கல்வி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • ராபின் மின்ஸ், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியில் பங்கேற்கும் முதல் பழங்குடியின கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றினைப் படைத்துள்ளார்.
  • 2022 ஆம் ஆண்டில் புலிகளின் தாக்குதல்களால் நாட்டில் மொத்தம் 112 உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • கிரிஸ் கோபாலகிருஷ்ணன், N. தயாசிந்து மற்றும் கிருஷ்ணன் நாராயணன் ஆகியோரால் எழுதப்பட்ட The IT Story of India மற்றும் T.N. ஹரி மற்றும் பாலா ஸ்ரீநிவாசா ஆகியோர் இணைந்து எழுதிய Winning Middle India: The Story of India’s New-Age Entrepreneurs ஆகிய புத்தகங்களுக்கு 2023 ஆம் ஆண்டு கஜா கேபிடல் வணிக புத்தகப் பரிசு வழங்கப் பட்டுள்ளது.
  • USV பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் பயோஜெனோமிக்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, இன்சுலின் அஸ்பார்ட் என்ற மருந்தின் உயிரி கட்டமைப்பினை ஒத்த வகையிலான INSUQUICK எனப்படும் இந்தியாவின் முதல் உயிரி ஒத்த மருந்தினை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளன.
    • இது நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த மருந்திற்கான அணுகலை மேம்படுத்தும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான உடன்படிக்கையின் 20வது ஆண்டு நிறைவை 2023 ஆம் ஆண்டானது குறிக்கிறது.
    • 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் தேதியில் மெக்சிகோ நகரில் கையெழுத்திடப் பட்ட இந்த உடன்படிக்கையானது சட்டப்பூர்வமாகப் பிணைக்கும் பலதரப்பு சர்வதேச ஊழல் எதிர்ப்பு ஒப்பந்தமாகும்.
  • கௌஹாத்தியில் நடைபெற்ற 75வது மாநிலங்களுக்கு மற்றும்  மண்டலங்களுக்கு இடையேயான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் (2023), மஹாராஷ்டிரா அணி மகளிர் பிரிவிலும் மற்றும் இந்திய விமான நிலைய ஆணைய அணி (AAI) ஆடவர் பிரிவிலும் பட்டத்தை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்