உயர்கல்வி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் நியமிக்கப் பட்டுள்ளார்.
ராபின் மின்ஸ், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியில் பங்கேற்கும் முதல் பழங்குடியின கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றினைப் படைத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் புலிகளின் தாக்குதல்களால் நாட்டில் மொத்தம் 112 உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிரிஸ் கோபாலகிருஷ்ணன், N. தயாசிந்து மற்றும் கிருஷ்ணன் நாராயணன் ஆகியோரால் எழுதப்பட்ட The IT Story of India மற்றும் T.N. ஹரி மற்றும் பாலா ஸ்ரீநிவாசா ஆகியோர் இணைந்து எழுதிய Winning Middle India: The Story of India’s New-Age Entrepreneurs ஆகிய புத்தகங்களுக்கு 2023 ஆம் ஆண்டு கஜா கேபிடல் வணிக புத்தகப் பரிசு வழங்கப் பட்டுள்ளது.
USV பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் பயோஜெனோமிக்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, இன்சுலின் அஸ்பார்ட் என்ற மருந்தின் உயிரி கட்டமைப்பினை ஒத்த வகையிலான INSUQUICK எனப்படும் இந்தியாவின் முதல் உயிரி ஒத்த மருந்தினை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளன.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த மருந்திற்கான அணுகலை மேம்படுத்தும்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான உடன்படிக்கையின் 20வது ஆண்டு நிறைவை 2023 ஆம் ஆண்டானது குறிக்கிறது.
2003 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் தேதியில் மெக்சிகோ நகரில் கையெழுத்திடப் பட்ட இந்த உடன்படிக்கையானது சட்டப்பூர்வமாகப் பிணைக்கும் பலதரப்பு சர்வதேச ஊழல் எதிர்ப்பு ஒப்பந்தமாகும்.
கௌஹாத்தியில் நடைபெற்ற 75வது மாநிலங்களுக்கு மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் (2023), மஹாராஷ்டிரா அணி மகளிர் பிரிவிலும் மற்றும் இந்திய விமான நிலைய ஆணைய அணி (AAI) ஆடவர் பிரிவிலும் பட்டத்தை வென்றது.