இந்தியாவின் மொத்தக் கடன் அல்லது சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் மொத்த நிலுவையில் உள்ள பத்திரங்களின் மதிப்பு செப்டம்பர் மாதம் வரையான காலாண்டில் 2.47 டிரில்லியன் டாலர் (ரூ. 205 லட்சம் கோடி) ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச மேசைப் பந்தாட்ட கூட்டமைப்பின் (ITTF) அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினராக இணைக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை விட்டா டானி பெற்றுள்ளார்.
கவிஞர் மற்றும் விமர்சகர் சுக்ரிதா பால் குமாரின் ‘’Salt & Pepper: Selected Poems’ என்ற புத்தகத்திற்காக அவருக்கு 6வது ரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசு வழங்கப் பட்டு உள்ளது.
தேசிய அனல் மின் கழகத்தின் கண்ட்டி அனல் மின் நிலையம் ஆனது “தொழில்துறை நீர் பயன்பாட்டுத் திறன்” பிரிவில் 11வது FICCI நீர் விருதினை வென்றுள்ளது.
இந்தியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு முகமையின் (IREDA) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரதீப் குமார் தாஸ் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ‘ஆண்டின் சிறந்த தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்’ விருதைப் பெற்றுள்ளார்.
தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பத்ம பூஷன் விருது பெற்றவருமான டாக்டர் V. மோகினி கிரி சமீபத்தில் காலமானார்.
1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, இவர் 1972 ஆம் ஆண்டில் போரினால் கைம்பெண் நிலைமைக்குத் தள்ளப்பட்டவர்கள் என்ற சங்கத்தைத் தொடங்கினார்.