TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 28 , 2023 333 days 243 0
  • உலக சுகாதார அமைப்பானது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப் பட்டு, இந்திய சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட R21/Matrix-M என்ற மலேரியா தடுப்பூசியை அதன் முன் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்த்து உள்ளது.
  • இன்வெஸ்ட் இந்தியா முகமையானது, 27வது உலக முதலீட்டு மாநாட்டினை (WIC) புது டெல்லியில் நடத்தியது.
    • இந்த ஆண்டின் மாநாடானது, “முதலீட்டாளர்களுக்கு அதிகாரமளித்தல்: முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகள் எதிர்கால வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்தல்” என்ற கருத்துருவுடன் நடைபெற்றது.
  • நாட்டின் இளையோர்களுக்கு, விக்சித் பாரத் @2047 என்ற தொலை நோக்குத் திட்டத்திற்கான தங்களது கருத்தாக்கங்களைப் பங்களிப்பதற்காக ஒரு தளத்தினை வழங்குவதற்காக ‘விக்சித் பாரத் @2047: இளையோர்களின் குரல்’  என்ற முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
    • விக்சித் பாரத் @2047 என்பது சுதந்திரம் பெற்றதன் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டமாகும்.
  • அனைத்து நிலைகளிலும் தொற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் ஏற்பட உள்ள பல்வேறு பெருந் தொற்றுகளுக்காகத் தயாராகுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் டிசம்பர் 27 ஆம் தேதியன்று சர்வதேச தொற்றுநோய்த் தயார்நிலை தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்