TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 29 , 2023 203 days 205 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்சய சட்டம் ஆகிய மூன்று புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
    • இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1872 ஆம் ஆண்டு இந்தியச் சாட்சியச் சட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக அவை அமைய உள்ளன.
  • இந்தியாவின் சுரங்க அமைச்சகம் ஆனது, 9 மாநிலங்களில் உள்ள 22 முக்கியமான கனிமத் தொகுதிகளை இனி மேற்கொள்ளப்பட வேண்டி உள்ள ஏலத்தில் ஈடுபடுத்த அங்கீகாரம் அளித்துள்ளது.
    • இந்தத் தொகுதிகள் கோபால்ட், டைட்டானியம், காலியம், வெனடியம், டங்ஸ்டன், லித்தியம் மற்றும் அருமண் தனிம இருப்புக்களைக் கொண்டிருக்கின்றன.
  • இன்டஸ்இன்ட் வங்கியானது, ‘இன்டஸ்இன்ட் வங்கி இ ஸ்வர்ணா’ எனப்படும் இந்தியாவின் முதல் பெருநிறுவன கடன் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பெற்றது.
    • 1977 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணியுடன் முதல்முறையாக மோதிய பிறகு நடைபெற்ற 11 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்