மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் IMPRINT - II (Impacting Research Innovation and Technology) திட்டத்தின் கீழ் 112 கோடி ரூபாய் மதிப்புள்ள 122 புதிய ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முன்மொழிதலுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதுதில்லியில் மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்ற IMPRINT - II உயர்மட்டக் குழுவின் சந்திப்பில் இப்புதிய ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நிலவுக்கு அனுப்பப்பட உள்ள இந்தியாவின் இரண்டாவது திட்டமான சந்திராயன் - 2 திட்டத்தினை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation - ISRO) ஜனவரி 2019-க்கு தள்ளி வைத்துள்ளது. இத்திட்டம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நிலவிற்கான திட்டத்தினை டிசம்பர் 2018-ல் தொடங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தாமதத்தினால் நிலவின் மீதான மிதமான தலையிறங்குதலில் இந்தியா 4வது இடத்தினை இஸ்ரேலிடம் இழக்க வாய்ப்புள்ளது.
சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு 25 விமான நிலையங்கள் மற்றும் 5 துறைமுகங்களில் 165 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான மின்னணு விசா வசதியினை நீட்டித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைமை அதிகாரியாக சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் மன்ற கூடுதல் தலைமை நீதிபதி ஏ.ஜாகீர் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.